Saturday 31 October 2015

எண்ணெய் தேய்த்து குளி - OIL BATH



Deepawalikku9


Deepawalikku1

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?
“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
நதியா நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்தில் “தீவளிக்கு தீவளி…. எண்ண தேச்சி நீ குளி… பாட்டி சொன்ன வைத்தியம்… கேட்டு வந்தேன் பைங்கிளி…” என ஒரு பாடல் வரும்.
நிச்சயமாக அந்த பாட்டி ஒரு மக்கு பாட்டியாகத்தான் இருக்கவேண்டும்.
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
Deepawalikku7

ஆனால் ஏதாவது பண்டிகை வந்தால்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒன்றும் சடங்கல்ல. அது ஒரு ஆரோக்கிய செயல்முறை. என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கவேண்டிய தேவையில் சோர்வுறுவது நல்லதா?
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வரும் பலன்கள் :
-          உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ).
-          உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
-          தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
-          தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
-          தோல் மென்மையாகும்.
-          தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும்.
-          தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
-          தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
-          கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்
-          கண் பார்வை பாதுகாக்கப்படும்.
-          தலைமுடி நன்கு வளரும்.
-          உடல் வறட்சி மாறும்
-          தலைக்கு பலம் உண்டாகும்
-          முழங்கால் மூட்டுகள் பலமடையும்
-          குரல் வளம் பாதுகாக்கப்படும்
-          உடல் அசதி தீரும்
-          தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
-          நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
-          நரம்பு மண்டலம் பலப்படும்
-        குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?
எண்ணெய் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
Deepawalikku21. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான். நெய்ப்புத்தன்மை உள்ள பொருளையே நெய் என்கிறோம். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். திலம் என்ற வார்த்தைக்கு எள் என்று பொருள். எனவே திலத்திலிருந்து எடுப்பதால் தைலம் என்று பெயர் வந்தது. பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நல்லெண்ணெயே பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.
Deepawalikku5

2. பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம். (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)
Deepawalikku8பசு நெய் தேய்த்து குளிப்பாட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்த கொதிப்பு, மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்சனைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.
Deepawalikku12

3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணையும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து பயன்படுத்தலாம். பசுவின் நெய் தேய்த்து குளிக்கும்போது பச்சைப்பயறு பொடி தேய்த்துக் குளிக்கலாம்.

Deepawalikku4

எண்ணெயை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பறக்க தேய்க்கக் கூடாது.
தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கவேண்டும்.
“ எண்ணெய்ப்பெறின் வெந்நீரிற்குளிப்போம்……” என்றதால் எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெந்நீரில்தான் குளிக்கவேண்டும்.
Deepawalikku6வெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரை பயன்படுத்துவது நல்லது.
தேய்த்து குளிக்க அரைப்பு :
நெல்லிக்காய் பருப்பு – 1 ¼ பங்கு
வெண்மிளகு       – 1 பங்கு
கஸ்தூரி மஞ்சள்   – ¾ பங்கு
கடுக்காய் தோல்     – ½ பங்கு
வேப்பம் விதை       – ¼ பங்கு
இவைகளை பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும்). அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் உடலுக்கு தகுந்த குளியல் பொடிகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அதே போல நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ?
Deepawalikku10

பதார்த்த குண சிந்தாமனி என்னும் புத்தகம் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டிய நேரத்தை இவ்வாறு விளக்குகிறது.
“அயமா னிவைக்கம் பதத்துளி யாழ்குளிர்க் கட்டமத்துள்
வயமா கனிக்குங்கோல் தேட்குநந் நான்குவின் மானிரண்டே
பயமார் கடமார்ச்சத் திற்குந் திரிக்குட் பகர்திங்களி
னயமாந்த தயிலங்க ளாடவ ரோகமெய் நண்ணுவரே”
அதாவது
- சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
- ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
- ஆவணி, புரட்டாசி, அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணிக்குள்.
- மார்களி, தை மாதங்களில் ( டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
- மாசி, பங்குனி மாதங்களில் ( பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது
- சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிப்போம்.
வாத நோய்கள்
பித்த நோய்கள்
கப நோய்கள்
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
-          செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்)
எண்ணெய் தேய்த்து குளித்தபின் செய்யக்கூடாதவை
-          கடுமையான வேலைகள் செய்யக்கூடாது.
-          வெய்யிலில் சுற்றக்கூடாது.
-          உடலுறவு கூடாது.
-          பகலில் உறங்கக்கூடாது
-          அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளை செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
-          கீரைத்தண்டு
-          அறு கீரை
-          மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள்
-          வெல்லம்
-          பூசணிக்காய்
-          மாங்காய்
-          தேங்காய்
-          அகத்திக்கீரை
-          கசப்பான சுவையுள்ள பொருட்கள்
-          பழங்கள்
-          இளநீர்
-          சேம்பு, கத்தரிக்காய் , கொத்தவரை, மொச்சை,
-          நண்டு, மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி , பன்றிக்கறி
-          எள், கொள்ளு, உளுந்து, கடலை
-          பால், தயிர், குளிர்ந்த பானங்கள்
-          வெங்காயம்
இவைகளை எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
  
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
- எண்ணெய் தேய்த்து குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்,
ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன் , சுறா சாப்பிடலாம்.
- காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது)
- தயிர் , பால் சாப்பிடக்கூடாது ஆனால் நெய் சாப்பிடலாம்.
- கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.
- மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு மண் சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரை பயன்படுத்தலாம்.
- காய்கறிகளை பொருத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ணவேண்டும்.
என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்கவேண்டும்?
Deepawalikku9ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதை கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவேண்டும். என்னென்ன நோய்களுக்கு, அதற்கான சிறப்பான தைலங்கள் உள்ளன என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
-          சில கண் நோய்கள்
-          காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT)
-          பீனிச நோய்கள் (sinusitis)
-          இரத்தக்கொதிப்பு
-          சில தலை நோய்கள்
-          ஒற்றை தலைவலி
-          சில உடல் வலிகள்
-          சில வாத நோய்கள்
-          மூளை நோய்கள்
எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஒரு சடங்கு போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்கவேண்டும்.

CLINIC :
DR. JEROME XAVIER B.S.M.S., M.D
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI.
INDIA
MOBILE - 9444317293

Thursday 29 October 2015

தங்க பற்பம்




                         16.8.2015   ராணி வார இதழ்   பேட்டி

Wednesday 28 October 2015

நீரிழிவு நோய்க்கு யோகா ஏன் அவசியம்








clinic : Dr. JEROME XAVIER. B.S.M.S., M.D
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY 
CHENNAI
MOBILE ; 9444317293 




Monday 26 October 2015

தோல் நோய்கள்





tholnoi fi


மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர்.

இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ. அதைவிட தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல்.
siddhamaruththuvam3


அதனால்தான் தோலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை எவ்வித தயக்கமுமின்றி என்னால் சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில் தோல்நோய்கள் பற்றிய அநேக கேள்விகளுக்கு விடை இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக,அரிப்பு எனும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது.

கரப்பான் ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் கிடையாது (Eczema). இப்படி,‘idiopathic’ அதாவது காரணம் இல்லாமல் வருகின்ற நோய்கள் என நிறைய நோய்கள் நவீன மருத்துவத்தில் விளக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நவீன மருத்துவத்தை குறைசொல்வதற்காகக் கூறவில்லை.

தோல்,கல்லீரல் போன்ற சிக்கலான அமைப்புகளையுடைய உறுப்புகளில் அந்தப் பகுதி சார்ந்த மருத்துவம் பலன் தராது (Localised). மாறாக முழுமையான ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது (Holistic). இந்தமுழுமையான அணுகுமுறைதான் சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் பயன்படுகிறது. எனவேதான் தோல்நோய்களில் சித்த மருத்துவமே நிரந்தரத் தீர்வைத் தருகிறது.

ஏன் இவைகளுக்கெல்லாம் இன்றும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், எல்லாவற்றையுமே நுண்ணோக்கி மூலம் பார்த்து அல்லது ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்து விடை தேடுவது நவீன மருத்துவத்தின் இயல்பு. ஆனால் கண்ணுக்குத் தெரியாத உடல் இயக்கங்களான 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளே தோல் நோய்களுக்குக் காரணம் என சித்த மருத்துவம் விளக்குகிறது.

நரம்புகள் என்பவைகளில்தான் வாதம் எனும் வாயுக்களின் செயல்பாடு உள்ளது. மனதும் வாயுக்களின் செயல்பாடு உள்ள பகுதிதான் (பிராணன் எனும் வாயுவின் இயக்கமே மனதின் இயக்கம்). மனதில் ஏற்படும் பிரச்சனைகளும் தோல் நோய்களைத் தூண்டிவிடும்.

தோல் நோய்களுக்கான சிகிச்சையின் அடிப்படை:

சித்தமருத்துவத்தில் அரிப்புக்கு ஒரு மருந்து, தடிப்புக்கு ஒரு மருந்து என தனித்தனியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. தோல் நோய்கள் உடலின் சாரம் (திரவப்பகுதி), இரத்தம், தசை ஆகிய மூன்றையும் பாதிப்பதால் இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய மருந்துகளையும், உடல் தாதுக்களை வலிமைப்படுத்தக் கூடிய மருந்துகளையும் அடிப்படையாகக் கொண்டும், மேலும் அந்த குறிப்பிட்ட நோய் எதனால் உண்டாகிறது என்ற அடிப்படையிலும் மருத்துவம் செய்யப்படுகிறது.
மேலும் சிறு பூச்சிகள் மற்றும் வண்டுகளின் கடியினாலும் மற்றும் கிருமிகளாலும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன என சித்த மருத்துவத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தோல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உள்ளன?
  1. முகப்பரு
  2. வெண்குட்டம் – Leucoderma
  3. சொரியாசிஸ் – (காளாஞ்சகப்படை) (psoriasis)
  4. கரப்பான் – (Eczema)
  5. தேமல் – (Tinea)
  6. பொடுகு – (Dandruf)
  7. சேற்றுப்புண்
  8. பித்த வெடிப்பு
  9. படுக்கை புண் – (Bed Sore)
  10. தடிப்பு
  11. அரிப்பு
  12. தோல் வறட்சி
  13. வேர்க்குரு
  14. வாய்ப்புண்
  15. கால் ஆணி

1. வெண் குட்டம் (வெண் புள்ளி நோய்):


thol noi5
இது தொற்று நோய் அல்ல. ஒருவருக்கு இந்த நோய் குணமாகுமா,குணமாகாதா என்பதை சித்த மருத்துவ முறையில் கணிக்க முடியும்.
குணமாகும் என கணிக்கப்பட்டவர்கள் முறையாக மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம்இந்நோயிலிருந்து முற்றிலும் விடுதலைப் பெறலாம். முழுமையாக குணமாகாது என கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்தை எடுத்துக் கொள்வதால் இந்நோய் மேற்கொண்டு உடலில் பாராமல் தடுக்க முடியும்.
உடலில் தோலின் வெள்ளை நிற புள்ளிகளையும் படைகளையும் ஏற்படுத்தும் நோய். இது தோல் நிறமிகளில் ஏற்படும் குறைபாடே.


2. காளாஞ்சகப்படை(psoriasis):

siddhamaruththuvam2
சொரியாசிஸ் என அழைக்கப்படும் இந்நோய் பல்வேறு காரணங்களால் வருகிறது. இதில் செந்நிற பருக்களும், தடிப்புகளும் உண்டாகும். இவை வெண்மை நிற பளபளப்பான செதில்கள் மூடப்பட்டிருக்கும். சொறிந்தால் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
உடலில் படைகள் ஏற்படும் இடங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். சிலருக்கு நகங்களை பாதிக்கும். நகத்தில் சிறு குழிகள் உண்டாகும். இந்நோயினால் மூட்டு வலியும் ஏற்படலாம் (Psoriatic Arthritis).
சிகிச்சை:
முறையாக சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் முற்றிலும் குணமடையலாம்.

3 முகப்பரு:

thol noi4

குறிப்பாக வாலிப வயதில் உள்ள சிலருக்கு இது பெரிய பிரச்சனையாக இருக்கும்.

தீர்வு:

1. உணவு முறை (Food change)
2. உள் மருந்து
3. வெளி மருந்து (External Application)
இவற்றால் முகப்பருவிலிருந்து விடுதலை அடைய முடியும். இவற்றை பின்பற்றுவதால் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.


4. கரப்பான் (Eczema)

http://www.lib.uiowa.edu/hardin/md/dermnet/eczema24.html


தோலில் சொரசொரப்பான படைகள் தோன்றி, அந்த இடத்தில் வீக்கம் அல்லது சிறு சிறு குருக்கள் உண்டாகும். சிலருக்கு சிறு கீறல்கள் உண்டாகி நீர் கசியும், அரிப்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். உதாரணத்திற்கு, தவளையின் தோல் போல இருக்கும்.
வரும் காரணம்:
வெளியிலிருந்து ஏற்படும் உராய்வு அல்லது உள்ளுக்குள்ளே சாப்பிடும் உணவு ஆகிய ஏதோ ஒரு காரணத்தால் இந்நோய் வருகிறது.
கரப்பானை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை கரப்பான் பொருட்கள் என சித்த மருத்துவம் வகைப்படுத்துகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். சில மாமிசங்கள், கம்பு, திணை, வரகு, சாமை, மீன், கருவாடு, கத்திரிக்காய், முட்டை போன்றவை கரப்பான் பொருட்கள்.
மருத்துவம்:
இதில் பல வகைகள் இருப்பதால் அந்த வகைக்கேற்ற முறையான உள் மற்றும் வெளி மருந்துகளால் முற்றிலும் குணமாக்கலாம்.


5. தேமல்:

OLYMPUS DIGITAL CAMERA

தோலில் நிறமாற்றம் மற்றும் அரிப்பு ஆகிய குறிகுணங்களைக் கொண்டு ஆரம்பிக்கும் உடனடியாக நோய் கணிப்பு (Diagnosis) செய்வது அவசியம். ஏனென்றால் பல்வேறு தோல்நோய்கள் முதலில் தேமல் போல ஆரம்பிக்கலாம்.
மருத்துவம்:
உள் மற்றும் வெளி மருந்துகளால் முற்றிலும் குணமாக்கலாம்.


6. பொடுகு:

thol noi8
ஒருவகை பூஞ்சைக் காளானால் தலையில் ஏற்படும் நோய். தலையில் அரிப்பு,சொறிந்தால் பொடி போல உதிரும்.
மருத்துவம்:
முறையான உள் மற்றும் வெளி சித்த மருந்துகளால் முற்றிலும் குணமாக்க முடியும். மீண்டும் வராமல் தடுப்பதற்கு தலையணை உறைகள்,தலை உலர்த்தும் துணிகள் போன்றவற்றை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும்.


7. சேற்றுப்புண்:

ஈரமான தரையில் நடந்துகொண்டு நின்றுகொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கால் விரல் இடுக்குகளில் புண் ஏற்படும். கால் விரல்கள் மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இவை ஏற்பட்டால் எளிதில் குணமாகாமல் பிரச்சனை ஏற்படுத்தும்.

மருத்துவம்:
உள் மருந்துகள் மற்றும் தொடர்ச்சியான வெளி மருந்துகள் மற்றும் ஈரத்தரையை தவிர்த்து கால்களை உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் குணப்படுத்த முடியும்.


8. பித்த வெடிப்பு:
thol noi3
பாதங்களின் அடிப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். முக்கியமாக குதிங்காலில் ஏற்படும். இது ஒரு அழகுப் பிரச்சனையாக பலருக்கு ஆகிவிடுகிறது.
ஆனாலும் சிலருக்கு காலை கீழே ஊன்ற முடியாத அளவுக்கு வலி கொடுக்கும்.
மருத்துவம்:
சித்த மருத்துவத்தில் இதனை மிகச் சுலபமாக குணமாக்கலாம்.

9. படுக்கைப்புண்:
thol noi9தொடர்ந்து படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொதுவாக முதுகு மற்றும் உடலின் பின் பாகத்தில் ஏற்படும் புண்கள் இவை.
முக்கியமாக வயதானவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

மருத்துவம்:
சுகாதாரமான முறையில் படுக்கையை பராமரிப்பதாலும் சில புற மருந்துகளை உடலில் தடவி படுக்க வைப்பதாலும் இதனை தவிர்க்கலாம் மற்றும் குணமாக்கலாம்.
தோல் நோய்களைப் பொறுத்தவரையில் காலம் தாழ்த்தாமல் ஆரம்பத்திலேயே சித்த மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால் தோல் நோய்களிலிருந்து முழுமையாக விடுதலைப் பெற முடியும்.

உணவு:
பொதுவாக தோல் நோயாளிகள் மீன், கருவாடு, கத்திரிக்காய், மாங்காய், அதிக புளிப்புள்ள உணவுகள், அதிக காரமுள்ள உணவுகள், கரப்பான் பொருட்கள், தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
மருத்துவ குளியல் பொடிகளை பயன்படுத்தி குளித்து வருவதால் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கமுடியும். இவற்றை சித்தமருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வது நல்லது.

மனது:

மனம் அமைதியாய் இருப்பது தோல் நோய்களுக்கு அவசியம்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

Tuesday 20 October 2015

சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய யோகா ஆசனங்கள்

சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய யோகா   ஆசனங்கள்


இந்த ஆசனங்களை நீங்களாக செய்து பார்க்கக் கூடாது. 
எங்கள் சித்த மருத்துவ மையத்தில் முறையாக கற்றுத்தருகிறோம்.

ARDHA MATSYASANA

 


BUJANGASANA  
 



MATSYASANA








NAUKASANA





PAWANAMUKTASANA





HALASANA






SARVANGASANA





UDDIYANA BHANDHANA




URDHVA MUKHA SVANASANA





VAKRASANA






UTTANA PADASANA






PASCHIMOTTASANA






SAVASANA


ADDRESS :
DR. JEROME XAVIER. B.S.M.S., M.D
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI 
INDIA

MOBILE : 9444317293